மஹிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றி பெறச் செய்வோம் என்ற கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.
மஹிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றி பெறச் செய்வோம் என்ற கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி கண்டியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இவ்வாறு கூட்டாக இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
கண்டியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு சுதந்திரக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடரின் முதலாம் கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி நுகோகொடையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்சித் தலைமையின் அனுமதியின்றி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வேறும் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாத என தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்டி கூட்டத்தில் பங்கேற்குமாறு மஹிந்தவிற்கும் அழைப்பு
கண்டியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமெனக் கோரி கண்டியில் எதிர்வரும் 6ம் திகதி பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை நடத்த உள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் தலைவராக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
கண்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment