மக்களினதும் கட்சியினதும் அழுத்தம் காரணமாக அமைச்சுப் பதவியில் இருந்து வேதனையுடன் வெளியேறுகின்றேன்!

மக்களினதும் கட்சியினதும் அழுத்தம் காரணமாக உங்கள் அரசாங்கத்தில் வகிக்கும் நீதி அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்பதை மிகவும் ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள ராஜினாமா கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் வந்த மிகப்பெரும் அரசியல்வாதி நீங்கள். நாட்டை பல்வேறு வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றிருக்கிறீர்கள். மிக்க நன்றிக்கடனுடனும் நம்பிக்கையுடனும் உங்களை விட்டு பிரிகிறேன்.
எனக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியைத் தந்து எனது பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
IMG_1539

Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment