தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த Delhi Daredevils


தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த Delhi Daredevils

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புனே எம்.சி.ஏ. சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விளையாடின. 

நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் தரப்பில் இம்ரான் தாகிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டுமினி 2 விக்கெட்டுகளும், மெத்யூஸ், மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 

இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இறுதிவரை போராடி 19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. 

அந்த அணியில் யுவராஜ் 54 ஓட்டங்கள் எடுத்தார். 68 ஓட்டங்கள் எடுத்த மயாங் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

தொடர்ந்து 11 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த டெல்லி, இந்த வெற்றி மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment