ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி! முழு விவரம்

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி! முழு விவரம் - Cineulagam


இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றினைந்து சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் சென்னை ரைனோஸ் அணி ஏற்கனவே கேரளா மற்றும் வீர் மராத்தி அணியை வீழ்த்தி கம்பீர நடைப்போட்டது.

இதை தொடர்ந்து இன்று தனது 3வது ஆட்டத்தில் மும்பை ஹீரோஸை இன்று எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் சேர்த்தது. இதில் பேர்வானி அதிக பட்சமாக 46 ரன்களை சேர்த்தார்.

சென்னை அணி தரப்பில் பரத் 2 விக்கெட்டுகளையும், ஷாம், விஷ்ணு, விக்ராந்த் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதை தொடர்ந்து பேட் செய்த சென்னை அணி 15.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. இதில் விக்ராந்த் அதிரடியாக 63 ரன்களை சேர்த்தார். விஷ்னு 52 ரன்கள் மற்றும் ரமணா 25 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் சென்னை அணி தன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை ரைனோஸ் அணிக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
                                                                                                                                       M.H.M.Aasath
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment