பஸ் கட்டணங்கள் நிச்சயம் குறைக்கப்படும்: கெமுனு

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதுக்கு அமைய தனியார் பஸ் கட்டணங்களின் விலை நிச்சயம் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தனியார் பஸ்கட்டணங்களின் விலைச் சூத்திரத்துக்கு அமைய குறைக்கப்படும் என்றார்.
எரி­பொ­ருட்­களின் விலை நேற்று நள்­ளி­ரவு முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் அர­சாங்­கத்­தினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அந்நதவகையில்,
92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்­றரின் விலை 33 ரூபா­வாலும்
95 ஒக்டெய்ன் பெற்­றோலின் விலை லீற்றர் ஒன்­றுக்கு 30 ரூபா­வாலும்
ஒரு லீற்றர் சாதா­ரண டீசலின் விலை 16 ரூபா­வாலும்
விஷேட டீசல் ஒரு­ லீற்றர் 23 ரூபா­வாலும்
மண்­ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபா­வாலும் குறைக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment