உலக கிண்ணத் தொடருக்கான ஆரம்ப விழாவில் அவுஸ்திரேலிய பொப் பாடகிகளான ஜெசிகா மௌவ்போய், டினா அரினா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் நெதனியல், டேரல் பிராத்வைட் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் 11ஆவது உலக கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி மெல்போர்ன், கிறைஸ்ட்சர்ச் மைதானங்களில் இரு ஆரம்ப விழாக்கள் நடைபெறுகின்றன.
மெல்பேர்னின் சிட்னி மயர் மியூஸிக் பௌல் என்ற திறந்த வெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொப் பாடகி கள் ஜெசிகா மௌவ்போய், டினா அரினா மற்றும் பாடகர்கள் நெதனியல், டேரல் பிராத்வைட் பங்கேற்கின்றனர். இவர்களுடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் திறமையை வெளி ப்படுத்த உள்ளார்.
ஜெசிகா மௌவ்பாய் கூறுகை யில்,
உலக கிண்ண ஆரம்ப விழா வில் பங்கேற்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
ஐ.சி.சியின் உலக கிண்ண தலைமை அதிகாரி ஜோன் ஹொர்ன்டென் கூறுகையில், உலக கிண்ண தொடரை விக் டோரியா அரசுடன் இணைந்து நடத்துவது மகிழ்ச்சி. இதற்கான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் உடனடியாக விற்றுத்தீர்ந்து விட் டன என்றார். அத்துடன் இந்நிகழ்வில் முன் னாள் ஜாம்பவான்கள், இளம் வீரர்கள் என பலர் பங்கேற்கவு ள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment