சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசை வெளியீடு

சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யா­னது ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான தர வரி­சையை வெளியிட்­டு ள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் ஒரு நாள் அணி­க­ளுக்­கான தர­வ­ரி­சையில் அவுஸ்­தி­ரே­லிய அணி 120 புள்­ளி­க­ளுடன் தொடர்ந்தும் முத­லி­டத்தில் நீடிக்­கி­றது.
இந்­திய அணி (114 புள்­ளிகள்) 2ஆவது இடத்­தி லும் தென் ஆபி­ரிக்கா (113 புள்­ளிகள்) 3ஆவது இடத்­திலும் இலங்கை (109 புள்­ளிகள்) 4ஆவது இடத்­திலும் இங்­கி­லாந்து (104 புள்­ளிகள்) 5ஆவது இடத்­திலும் நியூஸி­லாந்து (101 புள்­ளிகள்) 6ஆவது இட த்­திலும் பாகிஸ்தான் (96 புள்­ளிகள்) 7ஆவது இடத்­திலும் மேற்­கிந்­திய தீவுகள் (94 புள்­ளிகள்) 8ஆவது இடத்­திலும் பங்­க­ளாதேஷ் (75 புள்­ளி கள்) 9வது இடத்­திலும் சிம்­பாப்வே அணி (53 புள்­ளிகள்) 10ஆவது இடத்­திலும் காணப்­ப­டு­கின்­றன.
அதே­நேரம் ஒரு நாள் துடுப்­பாட்ட தர வரி­சையில் தென் ஆபி­ரிக்க வீரர் ஏ.பி.டிவில்­லியர்ஸ் 891 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்தில் நீடிக்­கிறார். இரண்டாம் இடத்தில் மற்­றொரு தென் ஆபி­ரிக்க வீரர் ஹசிம் அம்­லாவும் (867 புள்­ளிகள்) விராட் கோஹ்லி (831 புள்­ளிகள்) ஒரு இடம் சரிந்து 3ஆவது இடத்­திலும் காணப்­ப­டு­கின்­றனர்.இலங்கை வீரர் குமார் சங்­கக்­கார 4ஆவது இடத்­தையும், மற்­றொரு இலங்கை வீர­ரான தில­க­ரட்ன டில்ஷான் (இலங்கை) 5ஆவது இடத்­தையும், நியூ­ஸி­லாந்து வீரர் வில்­லி­யம்சன் 6ஆவது இடத்­தையும் இந்­திய வீரர்­க­ளான ஷிகர் தவான், மகேந்­தி­ரசிங் டோனி ஆகியோர் 7வது 8வது இடங்­க­ளையும் குயின்டன் 9ஆவது இடத்­தையும், ஜோர்ஜ் பெய்லி 10ஆவது இடத்­தையும் பெற்­றுள்­ளனர்.
பந்து வீச்சு தர வரி­சை யில் சர்ச்­சைக்­கு­ரிய சுழல் பந்து வீச்­சா­ளர்­க­ளான பாகிஸ்­தானின் சயீட் அஜ்மல் முத­லி­டத்­திலும், மேற்­கிந்­திய வீரர் சுனில் நரையன் 2ஆவது இடத்­திலும் தொட­ரு­கின்­றனர். தென் ஆ­பி­ரிக்க வீரர் ஸ்டெயின் 3ஆவது இடத்­திலும், இங்­கி­லாந்து வீரர் ஜேம்ஸ் அண்­டர் சன் 4ஆவது இடத்­திலும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் மிச்சல் ஜோன் சன் 5ஆவது இடத்­திலும் காணப்­ ப­டு­கின்­றனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment