இலங்கையின் முன்னணி அபிவிருத்தி வங்கியான DFCC வங்கியும் அதன் வர்த்தக வங்கிச் சேவைப் பிரிவான DFCC வர்த்தன வங்கியும் (DVB) தமது நீர்கொழும்பு கிளையை மேலும் வசதியான புதிய இடத்திற்கு மாற்றியுள்ளன.
புதிய DVB கிளையின் திறப்புவிழா அண்மையில் DFCC குழுமத்தின் தலைவர் சீ. ரொய்ல் ஜான்ஸ், DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அர்ஜுன் பெர்னாண்டோ, DFCC வர்த்தன வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லக்ஷ்மன் சில்வா ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதேச மக்கள் ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். புதிய கிளை இல. 454, பிரதான வீதி, நீர்கொழும்பு என்னும் முகவரியில் அமைந்துள்ளது. பிராந்திய மற்றும் கிளை அலுவலகக் கட்டிடத் தொகுதியில் DFCC வங்கியும் DFCC வர்த்தன வங்கியும் இயங்கவிருக்கின்றன.
மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட புதிய கிளையில் நீர்கொழும்பு பிரதேச வியாபார சமூகத்தினரும் ஏனைய வாடிக்கையாளர்களும் இரு வங்கிகளினாலும் வழங்கப்படும் தரமுயர்ந்த வங்கிச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு DVB வழங்கும் வங ;கிச் சேவைகளுள் சேமிப்புக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள், நிலையான வைப்புக்கள், தனிப்பட்ட கடன்கள், வீடமைப்புக் கடன்கள், கல்விக் கடன்கள், வாகனக் குத்தகை, தங்க நகை அடகுக் கடன்கள், வியாபாரக் கடன்கள் என்பன உட்படும். கடனீட்டுப் பத்திரங்கள், NRFC,RFC, NNRFC ஆகிய வெளிநாட்டு நாணயக் கணக்குகள், வெஸ்டர்ன் யூனியன் மூலமான பணப் பரிமாற்றம் ஆகிய சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
DFCC வங்கியினால் நிறுவனங்களுக்கும் கைத்தொழில்களுக்கும் வழங்கப்படும் பல்வேறு நிதிச் சேவைகளுள் நிறுவன வங்கிச் சேவை, வேலைத்திட்ட நிதியிடல், SME நிதியிடல் என்பன உள்ளடங்கும். DFCC, DVB ஆகிய இரு வங்கிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நவீனமயப்படுத்தலுக்கு அமைய online banking service kiosks, virtual teller ஆகிய வசதிகளும் புதிய கிளையில் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தமது அநேகமான வங்கி அலுவல்களை வங்கியினால் வழங்கப்படும் இயந்திரங்கள் ஊடாகச் செய்துகொள்வதற்கு இது உதவும். ஒன்லைன் வங்கிச் சேவை, தினமும் 24 மணிநேரமும் செயற்படும் அழைப்பு நிலையம் 500க்கு மேற்பட்ட சொந்த மற்றும் பங்காளி வங்கிகளின் ATM கள் ஊடான வரையறையற்ற இலவச மீளப்பெறுகை வசதி என்பன வாடிக்கையாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காகப் புதிய கிளையில் செய்யப்பட்டுள்ள ஏனைய DFCC வங்கியும் DVB வங்கியும் தமது ஒருங்கிணைந்த அனுபவங்கள், தனித்தனி வலிமைகள், விரிவான தொழிலறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குத் தரமுயர்ந்த சேவைகளை வழங்குகின்றன. 1955ஆம் ஆண்டு பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் நிறுவப்பட்ட DFCC வங்கி, கடந்த 60 ஆண்டுகளாக அர்ப்பணிக்கப்பட்ட நிபுணத்துவத்துடன் தேசத்திற்குச் சேவையாற்றி வருகிறது. அது வேலைத்திட்ட நிதியிடல் மற்றும் SME நிதியிடல் போன்ற சேவைகளுக்குப் புகழ்பெற்ற இலங்கையின் முதலாவது விசேடத்துவ அபிவிருத்தி வங்கியாகும்.
உத்வேகமான செயற்பாட்டிற்கும் தொழில் நிபுணத்துவத்திற்கும் பிரசித்தி பெற்ற DFCC வர்தன வங்கி, 12 ஆண்டுகால தரமுயர்ந்த நிதிச் சேவைகளை இந்த வருடத்தில் கொண்டாடுகிறது. தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்வதுடன் சமூகத்தினர் மத்தியில் நட்புறவு, நல்லெண்ணம், உறுதிப்பாடு என்பவற்றையும் பரப்புவதற்கு அது தன்னை அர்ப்பணித்துள்ளது.
0 comments:
Post a Comment