கணனியில், வணிகம் மற்றும் பொறியியல் துறைகளில் இலங்கையில் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமாக திகழும் SLIIT, தனது MSc கற்கைகளுக்காக மாணவர்களை சேர்க்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் MSc பட்டம், தகவல் முகாமைத்துவத்தில் MSc பட்டம், தகவல் கட்டமைப்புகளில் MSc பட்டம், தகவல் தொழில்நுட்பத்தில் MSc பட்டம் மற்றும் என்டர்பிரைஸ் ஆப்ளிகேஷன்ஸ் டிவலப்மன்ட் தொடர்பில் MSc பட்டம் ஆகியவற்றுக்காக புதிய மாணவர்கள் சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆர்வமுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை 2015 மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கற்கைகளுக்கான மாணவர்கள் தெரிவின் போது உளச்சார்பு தேர்வு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நேர்முகத்தேர்வு 2015 ஜுன் மாதத்தில் இடம்பெறும்.
மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கற்கைகளை SLIIT விசேடமாக வடிவமைத்திருந்தது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் MSc பட்டத்துக்கான மாணவர்கள் சேர்ப்பு என்பது தற்போது 12ஆவது வருடமாக இடம்பெறுகிறது. இந்த கற்கைகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு, தகவல் தொழில்நுட்பத்தில் BSc பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் அல்லது வேறெந்தவொரு பிரிவிலும் அங்கத்துவத்தை பெற்றிருக்க வேண்டும். மேலும் SLIIT இனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில் அனுபவத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
முகாமைத்துவ அனுபவத்தை கொண்டுள்ளவர்களுக்கும் நிபுணத்துவ அமைப்புகளின் அங்கத்தவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் பொருத்தமான திட்டமாக SLIIT இன் தகவல் முகாமைத்துவ கற்கைகளுக்கான MSc பட்டம் அமைந்துள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் இளமானி பட்டத்தை எந்தவொரு பல்கலைக்கழகத்திடமிருந்தும் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், நிபுணத்துவம் வாய்ந்த கல்வியகமொன்றிலிருந்து அங்கத்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், முகாமைத்துவ மட்டத்தில் ஆகக்குறைந்தது மூன்று வருடங்கள் பணியாற்றிய அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் மீது காண்பிக்கும் உயர் நுட்பம் வாய்ந்த புத்தமைவுகள் மற்றும் வியாபாரங்களுடனான வெற்றிகரமான ஒன்றிணைவுகள் போன்றவற்றுடனான தகவல் கட்டமைப்புகளில் MSc பட்டம் கற்கை என்பது தகவல் தொழில்நுட்பம், கணனி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் அல்லது வேறெந்த கற்கைகளுக்கும் BSc பட்டத்தை பெற்றிருத்தல் வேண்டும். மேலும் நிபுணத்துவம் வாய்ந்த கல்வியகமொன்றில் அங்கத்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் SLIIT இனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில் அனுபவத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
SLIIT இன் தகவல் தொழில்நுட்பம் (Cyber Security) தற்போது ஐந்தாவது வருடமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலமாக தரவுகள், வளங்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் பட்டதாரிகளுக்கு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.
தகவல் தொழில்நுட்பத்தில் இளமானி பட்டம், கணினி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் அல்லது வேறெந்த பட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment