நான் ஒதுங்கியிருப்பதாகவும் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பஷி்ல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பஷில் ராஜபக்ஷவுக்கும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எனக்கும் எனது சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனால் நான் விரக்தியுடன் இருப்பதாகவும் கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இது வேண்டுமென்று சிலர் பொய்ப்பிரசாரங்களை வெளியிடுகின்றனர்.
கருத்து வேறுபாடுகள் யாருக்கும் இருக்கலாம். அது சகோதரர்களுக்கிடையிலும் தந்தை மகனுக்கிடையிலும் இருக்கலாம். அவ்வாறு எனக்கும் எனது சகோதரருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் இருவரும் விரிசலுடன் இருக்கின்றோம் என்பது தவறான கருத்தாகும்.
எவ்வாறெனினும் நான் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு அதிக காரணங்கள் இருக்கின்றன. அவற்றை தற்போது கூறிக்கொண்டிருக்க முடியாது. என்னைப் பாதித்த ஒரு சில காரணங்களினால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
எனினும் மக்களுக்கான எனது சேவையை நான் வழங்குவேன். அதனை விடுத்து எனது சகோதரர் கோத்தபாயராஜபக்ஷவுடனான பிரச்சினையில் நான் ஒதுங்கியிருப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை.
0 comments:
Post a Comment