தலைமைத்துவத்தை மீறும் எந்தச் சமூகமும் வெற்றி அடையாது



ஏ.எம்.அஹுபர்


இறையிருப்புக் கொள்கைகளில் மார்க்கம்,மதங்கள்,கோட்பாடுகள் அணைத்தும் தலைமைத்துவம் எனும் போது அதற்கென்று ஆழமான அர்த்தம் இருப்பதை வலிந்து நிற்கிறது என்பதை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் எதை நினைக்கிறோம் எதைச் செய்கிறோம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் ஆராயப்படும்போது பல கேள்விகளிற்கு பதில் தெளிவாகும்.
எமது முஸ்லிம் சமூகம் நடைமுறைகளில் இன்னும் பல்வேறு பாரிய சிக்கல்களை அடைந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. இலங்கை வாழ் முஸ்லிம்களில் இன்று தலைமைத்துவம் இருக்க மக்கள் ஒரு முடிவை எடுத்துள்ளதுனர் இம் முடிவின் விளைவாகவே தேசிய அரசியலில் முஸ்லிம்களின் நலனை முன்வைக்கும் தன்மையை அரசியல் தலைமைகள் இழந்துள்ளன எதிர்காலத்தில் வரப்போகும் தீர்வினை நோக்கும் போது மக்களின் நேரடியான இச் செயற்பாடுகளை தலமைத்துவங்கள் கருத்தக்களை முன்மொழிவதை தேசிய கட்சிகள் நலிவடையச் செய்யும் ஒரு செயலாகவே நாம் இதைக் கருத முடியும்.
வன்னியர் ஆட்சிக்காலம் தொடக்கம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் ஜனநாயக,ஆயுதப் போராட்டங்களில் தோற்றுப்போய் நின்ற தமிழ் சமூகம் முடிவுகளிட்காக தலைமைகளை முந்தியடிதுக்கொள்ளவில்லை அதனால் தீர்வு பற்றிச் சிந்திக்கும் தமிழ் சமூகம் பேரம் பேசும் சக்தியை இன்னும் இழந்துவிடவில்லை அதனால் அம்மக்களின் முடிவுகளும் அவர்களின் தலைமைத்துவத்தின் முடிவுகளும் எதிர்காலத்தில் சரியானா முடிவுகளாக அமையலாம்.
தலைமைத்துவ கட்டுப்பாட்டை இழந்த சமூகம் வழிகேடன விடயத்தை சரிகண்டால் அல்லது சரியான விடையத்தை சரிகண்டாலும் தலைமைத்துவமும் அதன் முடிவும் இல்லையென்ற காரணத்தினால் இம் முடிவுகள் அனைத்தும் பிழையான முடிவுகளாகவே அமையும்.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment