அட்டாளைச்சேனையில் பொதுமக்களுக்கான பொலிஸ் நடமாடும் சேவை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவியுடன், பொலிஸ் நடமாடும் சேவை சனிக்கிழமை (21) அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இச்சேவை மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இந்த நடமாடும் சேவையில் ஆள் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுதல், பொதுமக்கள் சமுர்த்தி உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலுள்ள பிரச்சினைகள், பற் சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவம், பொதுமக்களுக்கான பொதுச் சுகாதார பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்ட, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செலயாளர் ரீ.ஜே.அதிசயராஜ் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment