நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்

சுண்­டைக்காய் கசப்பு சுவை­யு­டை­யது. இதை பல்­லாண்டு கால­மாக தமி­ழர்கள் உண­விற்­காக விரும்பி பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

கோழை­ய­கற்­றி­யா­கவும் நீரி­ழிவு , இருமல், வயிற்­றுப்­பூச்­சி­கொல்­லி­யா­கவும், மூலம் ஆகிலி­ய­வற்றை குண­மாக்கும் மருந்தாகவும் செயல்­ப­டு­கி­றது. இதன் இலை­ மா­த­விடாய் தொல்­லை­க­ளுக்கும், தோல்­நோய்­களுக்கும் மருந்­தாக விளங்குகி­றது. காயை சமைத்து உண்டால் நுண் புழுவால் உண்­டான நோய்கள், வலி நோய்கள் போகும்.
சுண்­டை­வற்­றலை பயன்­ப­டுத்­தினால் சுவை­யின்மை, வயிற்றில் உள்ள புழு,நிணக்­க­ழிச்சல், சீதக்­கட்டு, மார்ச்­சளி, செரி­யாக்கழிச்சல், மூலம் நீங்கும். பசியை அதிகரிக்கும். தொடர்ந்து சுண்டைக்காய் வற்­றலை சாப்­பிட்­டு ­வந்தால் உடல் சூட்டால் ஏற்­படும் ஏப்பம், வயிறு விழுதல், வயிற்றுவலி மற்றும் வயிறு தொடர்­பான நோய்கள் நீங்கும். இரத்­தத்தை சுத்­தப்­ப­டுத்தி சிறு­நீரை பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச் சுற்றல், வாந்தி, மயக்கம், நீங்கும். மார்ச்­சளி, தொண்­டைக்­கட்டு, சுண்டை வற்றல், கறி­வேம்பு, மிளகு, வெந்­தயம் முத­லி­ய­வற்றை இளம் வறுப்­பாக வறுத்து தேவை­யானளவு உப்பு கலந்து பொடித்து கொள்­ள­வேண்டும். இந்த பொடியை உணவில் கலந்து சாப்­பிட பசி மந்தம், சுவை­யின்மை மலக்­குடல் கிரு­மிகள் நீங்கும்.
ஆஸ்­துமா, காசநோய் கட்­டுப்­படும். பால் சுண்­டையாக சமைத்து உண்டு வந்தால் கபக்­கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்­சூடு, மூலக்­க­டுப்பு, திமிர் பூச்சி முத­லி­யன போகும். சுண்டை செடியின் வேர்ப்­பட்­டையை பொடி­செய்து தேங்காய் குடு­வையில் வைத்து ஒரு சிட்­டிகை மூக்­கிட்டு உள்ளே இழுக்க நீரேற்றம், மண்­டைக்­குடைச்சல், ஒற்­றைத்­த­லை­வலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும். சுண்­டைவேர் ஒரு­கைப்­பிடி எடுத்து அரை­லீற்றர் தண்­ணீரில் போட்டு 200மில்லி­யாக வற்­றக்­காய்ச்சி வடி­கட்டி குடிக்க, வலி­யுடன் ஏற்­பட்ட காய்ச்சல் தீரும். சுண்­டைவேர், தும்­பைவேர், இலுப்­பை­பிண்­ணாக்கு சம­அ­ளவு எடுத்து, இடித்து பொடி­செய்து முகர இழுப்பு நோய் தணிந்து குணம்­ஏற்­படும்.
சுண்­டை­வற்றல்,கறி­வேம்பு, மாங்­கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்­தயம் இவற்றை ஒரே அள­வாக எடுத்து அதை தனித் தனி­யாக இள­வ­றுப்­பாக வறுத்து சூர­ண­மாக செய்து கொள்­ள­வேண்டும். இதில் 3 சிட்­டிகை அளவில் காலை மாலை மோரில் சாப்­பிட மூலம், மார்ச்­சளி நீங்கும். சுண்டைக்காய் வற்­றலை சிற்­றா­மணக்கெண்ணெயில் வறுத்து, இதனுடன் மிளகு, சீரகம், கறிவேம்பு, வெந்தயம் இவைகளை வறுத்து பொடித்து கொண்டு சாப்பிட மந்தம், செரியாமை, கட்டுப்படும்
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment