கடந்த 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தஞ்சம் அளித்ததாக அமெரிக்கா குற்றம் சாற்றியது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான 50 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, தாலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. பின்னர், அங்கு அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் முகாமிட்டனர்.
இந்த நேட்டோ படையினர் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக, தாக்குதல்களை நடத்தினர். இந்தப் போர் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேட்டோ படைகளை அங்கிருந்து வெளியேறுமாறு ஆப்கானிஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளைப் படிப்படியாக திரும்ப பெற்றன.
இந்நிலையில் டிசம்பர் 28 ஆம் தேதி (நேற்று) ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டன.
2015 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு ராணுவம் முழுமையாக ஏற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment