ஆளும் தரப்புடனும் எதிர் தரப்புடனும் அரசியல் அதிகார உறவுகளை வைத்துக்கொள்ளுவது பிழையானதல்ல

ஏ.எம்.அஹுபர்
---------------------

மாமனிதர் மர்ஹூம் எம்.எச் .எம் அஸ்ரப் அவர்கள் ஆளும்தரப்பினர்களுடனும் எதிர்தர்ப்பினர்கலோடும் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய உறவுகளை வைத்திருந்தார். அது எந்த அளவிற்கு என்றால் முஸ்லிம் சமூகம் இந்திய அமைதி காக்கும் படையினர் வெளியேறிய பின் பயங்கரவாத பசிக்கு இரையாகிய போது அரச பாதுகாப்பை பெருவதற்காக எதிர் அணயில் இருந்த தலைவர் அவர்கள் தன்னிடம் இருந்த தனிப்பட்ட உறவு முறையை பயன்படுத்தி பாதுகாப்பை பெற்றுக் கொண்டு விசேட அதிரடிப் மூலம் முஸ்லிம்களின் பாதுகாபிற்கு உதவினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கைகளிற்கு மாற்றமில்லாத வகையில் உறவுகளைப் பேணி எம் சமூகத்திற்கு உதவி செய்வதை பிழையான கண்ணோட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கு கட்சிட்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சீர் குழைக்கின்ற காழ்புணர்வு கொண்ட அரசியல் முகவர்களை முஸ்லிம்கள் அடையாளம் காண வேண்டும், ஏனெனின் எதிர்வரும் ஜனாதிபது தேர்தல் முடிவடைந்த பின்னர் நாம் சந்திக்க இருக்கும் அடுத்த பாராளமன்ற தேர்தலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் போன்றோர்களை தோற்க்கடிப்பதற்கான யுக்திகளாக ஊடங்களையும் இலத்திரினியல் ஊடகங்களையும் உண்மைக்கு புறம்பாக பயன்படுத்துகின்றனனர்.
முஸ்லிம்களின் முக வெற்றிலையான கல்முனைத் தொகுதியை பிளவுபடுத்தி அரசியல் தலைமைகளை அழித்து முஸ்லிம்களின் அரசியலை சரணகதி அரசியலிற்கு இட்டுச் செல்ல வழியமைக்காது விழிப்புணர்வுடன் பொறுமையுடன் செயற்பட்டு உண்மைக்கு பின்னால் ஒன்றிணைவோம்.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment