வெள்ளத்தினால் கொண்டுவட்டுவான் நீர் விநியோக குழாய் சேதம்; கல்முனைக்கு குடிநீ்ர் விநியோகம் தடை!


images
அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கல்முனைப் பிராந்தியத்திற்கு நீர் விநியோகிக்கப்படுகின்ற பிரதான குழாய் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது.
இதனால் நிந்தவூர், காரைத்தீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, கல்லாறு ஆகிய பகுதிகளுக்கான குடிநீ்ர் விநியோகம் நேற்று (27) மாலை தொடக்கம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
எனினும் சேதமடைந்துள்ள பிரதான குழாயை திருத்தப் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சீரான வானிலை நீடிக்கும் பட்சத்தில் நாளை (29) பகல் வேளைக்குள் குறித்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலி தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாக குழாய் நீர் தடைப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment