அதிக திரையரங்குகளில் வெளியாகும் கயல்





கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் அவர்கள் இயக்கி வரும் படம் கயல். இந்த படத்தில் சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக 'பொறியாளன்' ஆனந்தி நடிக்கிறார்.

டி.இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் வி.மகேந்திரன். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், காட் பிக்சர்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படம் முழுக்க முழுக்க காதல் படம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

இப்படம் வரும் 25ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதோடு இப்படம் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட 650 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment