ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக வாட்மோர் நியமனம்



வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே இழந்ததால், அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் மான்கோனோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.

உலகக்கிண்ண போட்டி நடக்க இன்னும் குறுகிய காலம் உள்ள நிலையில் பயிற்சியாளரை நீக்கியதால், அந்த பாதிப்பை சரிகட்டும் விதமாக அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வாட்மோரை புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது.

பந்துவீச்சு பயிற்சியாளரான டக்ளஸ் ஹோண்டா உலகக்கிண்ண போட்டி வரை வாட்மோருக்கு துணையாக இருப்பதற்காக அவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி, 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண மற்றும் 2007ம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியது.

அதன்பின், அந்த அணி சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால், அந்த அணியை முன்னிலைக்கு கொண்டு வருவது தான் வாட்மோரின் முதல் குறிக்கோளாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஜிம்பாப்வே அணி முதன்முதலாக ஆசிய கண்டம் அல்லாத சர்வதேச முன்னாள் வீரர் வாட்மோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதற்கு முன் இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக வாட்மோர் இருந்துள்ளார்.

இவரது தலைமையில் இலங்கை அணி 1996ம் ஆண்டு உலகக்கிண்ண வென்றது. பாகிஸ்தான் அணி அணி 2012ம் ஆண்டு ஆசியகிண்ண வென்றது. வங்கதேசம் 2007ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment