ஏ.எம்.அஹுபர்
---------------------
சமகால அரசியல் காய்நகர்த்தலில் ஜனாதிபதி முறை ஒழித்து பாராளமன்ற ஆட்சி முறையினை ஏற்படுத்தும் திட்டத்தினை முன்வைத்துள்ளனர், ஆனால் பல கட்சி முறை, பல்லின மக்கள் நாட்டிற்கு கால தாமதமற்ற நிர்வாகச் சிக்கலற்ற அபிவிரித்தியை மேம்படுத்த சிறந்த பண்பைக் கொண்டது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையாகும்.
ஆட்சியாளன் தவறிழைத்தான் என என்னி சிறந்த ஆட்சி முறையினை மாற்றுவது பிழையான முடிவாகும் அல்லது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் கொள்கையாக பார்க்கப்படும் போது மீண்டும் மக்கள் ஏமாற்றம் அடையலாம். அதே நேரத்தில் இரண்டு அணிகளும் முஸ்லிம்கலிற்கு எதிரான இனவாத அமைப்புக்கள் காணப்படுவதால் மக்கள் எடுத்த தீர்மானத்தில் வழி தவறிவிடும் நிலைமைகள் வந்துவிடக் கூடாது.
ஒரு இடையன் தன் ஆட்டு மந்தைகளை நினைத்த போக்கில் மேய விடமாட்டான் அவ்வாறு விட்டால் மிருகங்களிட்கு இரையாகி அழிவை பெற்றுத்தரும் அவ்வாறே சர்வதேச,தேசிய மற்றும் உள்ளூர் அரசியலிலும் பரிட்சாத்தியமான தலைமைகளில் நம்பிக்கை வைத்து முஸ்லிம்கள் தலைமைத்துவ கட்டுப்பாடுடன் நடப்பதே சிறந்ததாகும்.
மா மனிதர் அஸ்ரப் அவர்கள் இந்திய அமைதி காக்கும் படையினர் விடயத்தில் மக்கள் ஒரு முடிவிலும் அதற்கு மாற்றமாக தலைவர் ஒரு முடிவிலும் காணப்பட்டனர், ஈற்றில் மக்கள் முடிவு வெற்றி கண்டபோது பயங்கரவாத தீக் குச்சுகளிட்கு பஞ்சாக முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு அழிவினச் சந்தித்தனர் என்பது வரலாற்றுப் படிப்பினையாகும்.
அன்று தமிழ் முஸ்லிம் இனவாதத்தை சிங்கள தலைமைகள் தூண்டினர். இன்று சிங்கள முஸ்லிம் இனவாதத்தை தமிழர்கள் ஏற்படுத்த முனையலாம் ஆகவே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி நம்பிக்கையான முறையில் கை கோர்த்து முஸ்லிம் சமூகத்தை வலி நடத்தும் பாரிய பொறுப்பு தலைமைகளின் தார்மீக கடமையாகும்.

0 comments:
Post a Comment