-எம்.வை. அமீர் -
எதிரணி பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேனவை ஆதரித்து நேற்று இரவு கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்றலில் மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
கல்முனை பிரபல வர்த்தகர் ஏ.எம்.பைறுஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றவூப் ஹக்கீம், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய ஆஸாத் ஸாலி, நாடாளளுமண்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய தயா கமகே, மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும், அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரும், கல்முனை பிரதி முதல்வருமாகிய ஏ.எல்.ஏ.மஜீட் உட்பட கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நள்ளிரவையும் தாண்டிய நிலையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு வரலாறுகாணாத மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது அரசில் இருந்து விலகிய நிலையில் இக்கூட்டம் இடம்பெற்றிருந்தமையானது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment