ஐ.எஸ்.போராளிகளால் 48 மணி நேரத்தில் 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஐ.எஸ் போரா­ளி­களால் 48 மணி நேர காலப்­ப­கு­தியில் குறைந்­தது 17 பேருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி போரா­ளி­களால் இஸ்­லா­மிய தேச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பிராந்­தி­யத்­தி­லி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
'முஜாஹித்தின் செய்தி' என்ற தலைப்பில் இந்த மரணதண்டனை நிறைவேற்றங்களை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.தன்­னினச் சேர்க்­கையில் ஈடுப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான இரு ஆண்­க­ளுக்கு உய­ர­மான கட்­ட­டமொன்றின் கூரை­யி­லி­ருந்து கீழே தள்ளி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
அவர்­க­ளுக்கு தன்­னினச் சேர்க்கை நட­வ­டிக்­கை­களில் ஈடுப்­பட்­ட­தற்­காக மத சட்­டத்தின் கீழ் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தாக முக­மூ­டி­ய­ணிந்த போரா­ளி­யொ­ருவர் அறி­விப்பு செய்­ததை தொடர்ந்தே தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.
இந்­நி­லையில் கொள்­ளையில் ஈடுபட்ட குற்­றச்­சாட்டில் கைதான இரு­வ­ருக்கு உலோக சிலு­வையில் கட்டி வைக்­கப்­பட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.அவர்கள் இரு­வரும் டிரக் வண்­டி­களில் தண்­டனை நிறை­வேற்­றப்­படும் இடத்­துக்கு அழைத்து வரப்­ப­டு­கின்­றனர்.
சாதா­ரண உடையில் காணப்­பட்ட அவர்­க­ளுக்கு பின்னால் நின்ற இரு ஐ.எஸ்.போரா­ளிகள் அவர்கள் இரு­வ­ரையும் சுட்டுக் கொல்­கின்­றனர்.இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்தை பார்க்க கூடி­யி­ருந்த அனை­வரும் ஆண்­க­ளாவர். மேற்­படி மரணதண்­ட­னைகள் ஈராக்­கிய மொசூல் பிராந்­தி­யத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­ன.
அதே­ச­மயம் ஈராக்­கிய நினெவெஹ் பிராந்­தி­யத்தில் தகாத காதல் தொடர்பை பேணிய பெண்­ணொ­ரு­வ­ருக்கு போரா­ளிகள் கல்லால் எறிந்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ளனர்.அந்த பெண் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பின் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment