புதிய அரசாங்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி தாக்கல் செய்யும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய வாழ்க்கை செலவு கொடுப்பனவும் அதிகரிப்பு இதனுடன் இணைத்து அரச துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் மேலும் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும். எவ்வாறாயினும் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த ஊதிய அதிகரிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
0 comments:
Post a Comment