விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஷ்ணு நடித்த ‘ஜீவா’ படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்திலும் நடித்திருப்பது அவர்களின் நட்பின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
விஷ்ணு நடிப்பில் ஏற்கனவே வெளியான முண்டாசுபட்டி படம் போல் ‘இன்று நேற்று நாளை’ படத்தை முழுக்க முழுக்க காமெடியாக எடுத்திருக்கிறார்கள். இப்படத்தில் கருணாகரன் விஷ்ணுவிற்கு நண்பனாக நடித்திருக்கிறார்.
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.
0 comments:
Post a Comment