அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லம் டென் னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஸ்பெ யினின் ர/பேல் நடால், பிரிட்டனின் அன்டி முர்ரே, மகளிர் பிரி வில் ரஷ்யாவின் மரியா 'ரபோவா ஆகியோர் முன்னேறினர்.
மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடை பெற்றன. போட்டித் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள நடால், போட்டித் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கெவின் அண்டர் சனை எதிர் கொண்டார். கடும் போராட்டத்துக்குப் பின் 7-5, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் நடால் வெற்றி பெற்றார்.
"இக்கட்டான தருணத்துக்குப் பின் இந்த ஆட் டத்தில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. இன்று எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அநேகமாக, இங்கு இதுவரையிலும் நடந்த ஆட்டங்களில் இது தான் சிறந்த ஆட்டம்'' என்றார். கடந்த ஆண்டு இறுதிச் சுற்றில் வாவ்ரிங்காவிடம் தோல்வியடை ந்த நடால், எட்டாவது முறையாக அவுஸ்திரே லிய பகிரங்க காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கிர்ஜpயாஸ் முன்னேற்றம்: தரவரிசையில் 53 ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜpயாஸ், கிராண்ட்ஸ்லம் ஜம்பவான் ரோஜர் /பெடரரை தோற்கடித்த
ராக்கெட் உடைப்பு: போட்டித் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட் ரோவ் மோதிய ஆட்டம் சுவராஸ்யமாக இருந் தது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போராடி, முதலிரண்டு செட்களை பகிர்ந்து கொண்டனர். மூன்றா வது செட்டை முர்ரே வசப்படுத்த, நான்கா வது செட் சு+டு பிடித்தது.
இதில், முர்ரே நேர்த்தியாக செய ல்பட ஆட்டம் அவர் வசமானது. முடி வில் 6-4, 6-7(5), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் அதிருப்தி அடை ந்த டிமிட்ரோவ், ராக் கெட்டை கீழே போட்டு உடைத்தார். மற்றொரு ஆட்டத் தில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், அவு ஸ்திரேலியாவின் பெர்னார்ட் டாமிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பயஸ் ஜோடி முன் னேற்றம்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியா ண்டர் பயஸ், சுவி ட்சர்லாந்தின் மார் டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்திரே லியாவின் மாசா ஜோவனாவேச், சாம் தாம்ப்சன் ஜோடியை 6-2, 7-6 (2) என்ற நேர் செட்களில் தோற்கடித்தது. ஆனால், இந்தியாவின் ரோஹன் போபண்ணா, செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா ஜோடி, கிறிஸ்டியானா மிளாடெனோவிச், டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
0 comments:
Post a Comment