முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அலுத்கமகேவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு முன்னாள் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறு கோரியுள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு முன்னாள் அமைச்சர் அலுத்கமகே வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சில முக்கியஸ்தர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment