ஐ.எஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட ஜப்பானியர்களில் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்ததற்கு பிரித்தானியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனைகளை ஜப்பான் அரசு ஏற்காததால், பிணையக் கைதிகளில் ஒருவரை கொலை செய்தனர்.
இது தொடர்பாக பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமருன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஜப்பானை சேர்ந்த பாதுகாப்பு நிறுவன தலைவரான யுகாவாவை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்ததை பிரித்தானியா அரசு கடுமையாக கண்டிக்கிறது.
தீவிரவாதிகளின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்காமல் ஜப்பான் அரசு உறுதியாக செயல்பட்டது வரவேற்கத்தக்கது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீவிரவாதிகளுக்கு எதிராக ஜப்பான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா அரசு அனைத்து வகைகளிலும் உறுதுனையாக இருக்கும் என்றும் பிரதமர் டேவிட் கேமருன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment