நிய+ஸிலாந்துடனான ஆறாவது ஒருநாள் போட்டியிலும்; இலங்கை அணி 120 ஓட்டங்களால் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் ஏழு போட்டிகளைக் கொண்ட தொடரை நிய+ஸிலாந்து அணி 4-1 கைப்பற்றியது.
டுன்டனில் நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நிய+ஸிலாந்து அணி முதலிரு விக்கெட்டுகளையும் 59 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. அணித்தலைவர் பிரன்டன் மக்கலம் பஜ் +ஜpயத்திற்கு வெளியேறியதோடு குப்டில் 28 ஓட்டங் களையே பெற்றார்.
இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கான் வில்லியம்ஸ் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் இருவரும் சதத்தை ஒற்றை இலக்க ஓட்டங்களால் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
வில்லியம்ஸன் 95 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் டெய்லர் 105 பந்துகளில் 7 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார்.
பின்னர் வந்த கொரி அன்டர்ஸன் அதிரடியாக 28 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 40 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் நிய+ஸிலாந்து அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது இலங்கை அணி ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்திபோதும் நியு+ஸிலாந்து ஒட்டம் பெறுவதை தடுக்க முடியாமல்போனது. தம்மிக்க பிரசாத் 10 ஓவர்களுக்கு 59 ஓட்டங்களை கொடுத்து 2 விட்டுகளை வீழ்த்தினார்.
அன்ஜலோ மத்திய+ஸ் காயத்திற்கு உள்ளாகி இருப்பதால் இந்த போட்டியிலும் திரிமான்னவே தலைமை வகித்தார். இந்நிலையில் சவாலா இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு குமார் சங்கக்காரவை தவிர வேறு எந்த வீரரும் நின்றுபிடித்து ஆடவில்லை. ஆரம்ப வீரராக வந்த திரிமான்ன 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு மறுமுனையில் டில்'hனினால் 21 ஓட்டங்களையே பெற்றார்.
சோபிக்க தவறிய மஹேல ஜயவர்தானவினால் 9 ஓட்டங்களையே பெற முடிந்தது. சிறப்பாக ஆடிய சங்கக்கார மாத்திரம் 66 பந்துகளில் 7 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 81 ஓட்டங்களை பெற்றார். எனினும் இலங்கை அணி 40.3 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கே சுருண்டது.
நிய+ஸிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய கொரி அன்டர்ஸன் 10 ஓவர்களுக்கும் 52 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மக்லகன் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சில் சோபித்த கொரி அன்டர்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
நிய+ஸிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் ஜனவரி 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நிய+ஸிலாந்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் இலங்கை அணி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகவும் இது அமையவிருக்கிறது.
0 comments:
Post a Comment