வெலே சுதா நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் தேவிகா தென்னகோன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
போதைப் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தைக் கொண்டு முதலீடு செய்தமை உட்பட 58 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. நேற்று வெலே சுதாவின் மனைவி மற்றும் அவரது உறவினரான சகோதரி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை வெலே சுதாவுடன் தொடர்பு வைத்திருக்கும் வெளிநாட்டவர் களை கைதுசெய்யவென சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை கோர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிதுள்ளார்.
அண்மையில் களனி பகுதியில் டிராக்டர்கள் சிலவற்றில் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதை அடுத்து வெலே சுதாவுடன் போதைப் பொருள் தொடர்பு வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த தகவல் வெளியாகின. இவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிக்கை (ரெட் அலர்ட்) விடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment