11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில் 14 ஆவது லீக் போட்டியில் குழு “பி” யில் இடம்பெற்றுள்ள இலங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கிலாந்து அணிக்கு மொயின் அலியின் சதம் கைகொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொயின் அலி 128 ஓட்டங்களையும் பெல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக டேவி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
304 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி வெற்றிக்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி இங்கிலாந்து அணியின் பந்தவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று 119 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ஸ்கொட்லாந்து அணிசார்பாக துடுப்பாட்டத்தில் கியுட்சர் 71 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் பின் 3 விக்கெட்டுகளையும் அன்டர்சன் , வோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
119 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முதல்வெற்றியை பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.
இப் போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய மொயின் அலி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment