மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா (2015-02-21) சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் , சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபை தலைவர் மௌலவி சட்டத்தரணி என்.எம்.முஜீப், சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளை பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மன்றத்தின் அங்கத்தினர் கௌரவம் பெற்றோர் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

அத்துடன் கலாபூசணம் கே.எம்.ஏ.அசீஸ், பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக், கவிஞர் எம்.எம்.ஜமால்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது நூறு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மருதம் கலைக்கூடல் மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment