லிபியாவில் அல்--குப்பாஹ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
பெற்றோல் நிலையம், பொலிஸ் நிலை யம் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அகிலா சாலஹின் வீடு என்பவற்றை இலக்கு வைத்து 3 குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.
எகிப்திய வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ். போராளிகள் இணையத்தளம் மூலம் உரிமை கோரியுள்ளனர்.
21 எகிப்திய கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து, ஐ.எஸ். போராளிகளின் தளங்களை இலக்கு வைத்து எகிப்து வான் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
0 comments:
Post a Comment