இலங்கை இராணுவத்தின் 21ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அவர், லெப்டினன் தரத்துக்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கான நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க எதிர்வரும் 22ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றார். புதிய இராணுவத் தளபதி 22ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் 2013 ஆகஸ்ட் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இலங்கை இராணுவத்தில் பதவி நிலை பிரதானியாக செயலாற்றினார்.
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் படைத் தலைவராகவும் செயலாற்றிய அவர் திறமையான அனுபவமுள்ள அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment