நீச்சல் வீரர் பெல்ப்ஸ் திருமணம் ?

அமெரிக்காவின் முன்னணி நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது நீண்ட நாள் காதலியான நிகோலே ஜோன்சனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். 

மைக்கல் பெல்ப்ஸ் மற்றும் கடந்த 2010 இல் கலிபோனியா அழகி பட்டம் வென்ற நிகோலே ஜோன்சனுக்கும்  நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. 
திருமணத்திற்கான திகதி  இன்னும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதை பெல்ப்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் தெரிவித்துள்ளார்.
29 வயதான அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டியில் 18 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இது தவிர உலக போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று குவித்துள்ளார். 
இலண்டன்  கடந்த 2012 இல் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வை அறிவித்த பெல்ப்ஸ் கடந்த ஆண்டு மீண்டும் களம் திரும்பினார் .
கடந்த ஆண்டு இடம்பெற்ற பான் பசிபிக் நீச்சல் போட்டியில் 3 தங்கம் வென்ற பெல்ப்ஸ் குடிபோதையில் காரை செலுத்தியதால் 6 மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தார். 
பெல்ப்சின் தடைக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment