கூட்டமைப்புக்குள் உருவான சலசலப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உருவாகியிருக்கும் சிறு சர்ச் சையானது நாட்டின் அரசியல் களத்தில் சமீப காலமாக விமர்சன த்துக்குரிய பேசுபொருளாகியுள்ளது. கோட்டே ஸ்ரீஜயவர்தன புரவிலுள்ள பாராளுமன்ற மைதானத்தில் இம்மாதம் நான்காம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் எம்.பியும் எம். ஏ. சுமந்திரன் எம்.பியும் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்பினுள் சர்ச்சை உருவெடுக்கத் தொடங்கிவிட்டதெனலாம்.

தமிழ்க் கூட்டமைப்பினுள் தலைதூக்கிய முரண்பாட்டின் சலசலப்பு சற்றுத் தணிவதற்கிடையில் ஜெனிவா விவகாரமானது கடந்த சில தினங்களாக தீவிர வடிவம் பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக் கப்பட்டுள்ளமையே தமிழ்க் கூட்டமைப்பினுள் மற்றொரு சர்ச்சைக் குரிய காரணியாக அமைந்திருக்கிறது.
இரா. சம்பந்தன் எம்.பி, சுமந்திரன் எம்.பி. ஆகியோரின் உருவப் பொம்மைகள் புலம்பெயர் நாடொன்றில் அங்குள்ள தமிழர்கள் சிலரால் எரிக்கப்பட்ட சம்பவமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினுள் உருவெடுத்துள்ள சமீபகால சர்ச்சையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

அதேசமயம் போர்க் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒத்திவைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரி வித்து கடந்த வெள்ளிக் கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் சுமந்திரன் எம்.பியின் உருவப்பொம்மை தீயிடப்பட்டது. காணாமல் போனோரின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. யுத்தக் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை தாமதிக் கக் கூடாதென்பதுடன் உள்ளக விசாரணையை எதிர்ப்பதுமே ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களாகும்.

இங்கையின் 67 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினுள் உருவான சலசலப்பு வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியிலும் எதிரொலிக்கத் தவறவில்லை. இவ்விவகாம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பினுள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்கள் மத்தியிலும் எதிரும்புதிருமாக இருவேறு கருத்துகள் நிலவுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

சர்வாதிகாரம், ஊழல், முறைகேடு, இனவாதப் போக்கு நிறைந்த ஒரு தசாப்தகால ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து நடைபெற்ற முதலாவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க சம்பந் தன், சுமந்திரன் ஆகியோர் சென்றமை மரியாதையின் நிமித்தம் தவிர்க்க முடியாததென ஒரு தரப்பில் கருத்து நிலவுகிறது.

நல்லா ட்சியொன்று மலரச் செய்வதில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நிபந்தனையற்ற ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவர் சுதந்திர தின விழாவுக்குச் சென்றிருந்தமை கூட்டமைப்பின் அரசியல் பயணத்துக்குப் பாதகமானதொரு செயலல்ல என்பதே இக்கருத்துக்கான விளக்கமாக அமைந்துள்ளது.

அதேசமயம் மற்றைய தரப்பினர் மாறுபட்ட கருத்தை இவ்விடத்தில் முன்வைக்கின்றனர். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பான அரசியல் தீர்வு விடயமானது புதிய அரசாங்கத்தினால் இன்னுமே கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும் இந்நிலையில், தமிழ்க் கூட்ட மைப்பு முக்கியஸ்தர்கள் இருவர் சுதந்திர தின விழாவில் பங் கேற்றமை முறையற்றதாகுமென்பதே மாற்றுக் கருத்தாக அமைந்துள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் இருவர் சுதந்திர தின விழாவில் பங்கேற்றமையானது, இலங்கையின் அரசியலமைப்பை தமிழ்க்கூட்டமைப்பு முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டு விட்டமை க்கான அர்த்தத்தையும், இனப்பிரச்சினைக்கான தீர்வு ஜனாதிபதித் தேர்தலுடன் எட்டப்பட்டு விட்டதென்ற பொருளையும் உலகுக்கு வெளிப்படுத்தி விடக்கூடுமென்பதே மாற்றுக் கருத்துக்கான விளக்கமாக உள்ளது.

போர்க் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு விவகாரமும் அதுபோன்றே இருவேறு அபிப்பிராயங்களுக்கு வழியமைத்துள்ள தெனக் கூறுவதே பொருத்தமாகும்.
கடந்த காலத்தில் காணாமல் போனோரதும் யுத்தத்தின் போது உயிரிழ ந்தோரதும் உறவினர்கள் கொண்டுள்ள வேதனையும் மனச் சஞ்சல மும் குறைத்து மதிப்பிடக் கூடியவையல்ல என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. அவர்கள் மீதான கழிவிரக்கம் அலட்சியத் துக்குரியதுமல்ல.... அவர்களது நீண்ட காலத் துயரமும் விரக்தியுமே யாழ்ப்பாணத்தில் உருவப்பொம்மை எரிக்கும் வெளிப்பாடாக மாறியுள்ளது.

இதேவேளையில் மனக்குறைகளை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டமொன்றின் போது மக்கள் பிரதிநிதியொருவரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவமா னது அதிருப்தியான உணர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டாமலிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் அன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது மன ஆதங் கத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக் குழப்ப த்தை, இதுபோன்ற தீவிர சம்பவம் ஏற்படுத்தியிருக்கலாமென்பதே மக்கள் பலரின் அதிருப்தியான உணர்வலைக்குக் காரணமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் சமீப காலமாக தோன்றியிருக்கும் இருவேறு முரண்பாடுகள் தொடர்பாக நடுநிலையான அபிப்பிராயம் கூற விளைவது இவ்விடத்தில் முக்கியமானதன்று... வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் சக்திமிக்க தொரு தோழமைக் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப் பினுள் நிலவுகின்ற முரண்பாடானது இன்றைய அரசியல் சூழ்நிலை யில் ஆரோக்கியமானதல்ல என்பதையே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சிறுபான்மை மக்களின் மனக்குறைகளை நன்கு புரிந்து கொண்டுள்ள இன்றைய ஆட்சித் தலைமைக்கு தமிழ், முஸ் லிம் மக்கள் முழுமையான ஆதரவை கடந்த ஜனாதிபதித் தேர்த லின் போது வழங்கியிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டுவதற்கு இன்னும் சில காலம் பயணம் செய்ய வேண்டியுள் ளது. இப்பயணம் முரண்பாடுகளின்றி சுமுகமாக அமைய வேண்டு மென்ற ஆதங்கம் அம்மக்கள் மத்தியில் உள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளெனக் கூறக்கூடிய தகுதியைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளை இவ்வேளையில் சர்வதேசமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றதெ ன்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment