கல்முனை சாஹிராவில் சுதந்திர தின இரத்ததானம்!


2
(எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்)
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்காகவும் நாட்டுக்காகவும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர் அவர்களால் மரக்கண்டு ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
\
இதனைத் தொடர்ந்து இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவர்- சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரீப் அவர்கள் தலைமை வகித்தார்.
அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.கப்பார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனீபா, சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாகிர், உட்பட பல அதிதிகளும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இரத்ததான நிகழ்வு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாகிர் அவர்களது பங்குபற்றுதலுடன் டாக்டர்,எம்.ரீ.என்.சிபாயா, டாக்டர் கே.டீ.டீ.நடீஜா போன்றோரது மேற்பார்வையில் இடம்பெற்றது.
உத்தியோகபூர்வமாக சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவர் டாக்டர் என்.ஆரீப் அவர்களது மனைவி கலிதா ஆரீப் ஆகியோர் தங்களது இரத்தங்களை வழங்கி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரும் திரளானோர் கலந்து கொண்டு தங்களது இரத்த தானம் வழங்கி சுதந்திர தினத்தை மகிழ்வுடன் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
41 (1)3 (2)5

Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment