* இவ்வருட இறுதியில் ஜனாதிபதி அமெரிக்கா பயணம்
இலங்கையில் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணைகள் அனைத்தும் சர்வதேசதரத்தில் தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை கள் போன்று நம்பகத்தன்மையாக நடத்தப்படும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்தார்.
நல்லாட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எமது அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று உள்ளக விசாரணைகளை நடத்தவுள்ளதுடன் அவை சர்வதேச தரத்தில் நடத்தப்படும் என்று அரசு உறுதிமொழி வழங்கியதால் இலங்கைக்கு எதிரான அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படுவது பிற்போடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை அரசு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ராஜாங்க செயலர் உட்பட ஐ.நா. செயலாளர் நாயகம் ஆகியோரையும் எமது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார். இங்கு ஜோன் எப். கெரி மற்றும் ஐ.நாவின் அமெரிக்காவின் வதிவிட பிரதிநிதி சமந்தபவர் உட்பட அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மங்களசமரவீர நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கமளித்ததாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார். அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் எப். கெரி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள் ளதாகவும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்கவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் மங்கள அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்வார் என ராஜித தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூர் விசாரணைகள் தொடர்பில் அமெரிக்கா மட்டுமல்ல பிரிட்டன், ரஷ்யா, பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் தமது ஆதரவை வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை பேரவை அறிக் கையை தாமதப்படுத்துவது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் 6 மாதம் தாமதப்படுத்துவதற்கு முடிந்தது என்றும் அமைச்சர் மங்கள அமைச் சரவையில் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
0 comments:
Post a Comment