இதேவேளை நான் கலந்துகொண்டு விளையாடிய அணிகளில், தற்போதைய நியூசிலாந்து அணி தான் மிகவும் வலுவானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்கொட்லாந்து அணியுடனான போராட்ட வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரண்டன் மெக்கலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் எங்களது பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு உண்மையிலேயே அபாரமாக இருந்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி இங்கிலாந்து அணியை வெலிங்டனில் சந்திக்க இருக்கிறோம். இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
போல்டும் சௌத்தியும் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் . இருவரும் நிலையான இடத்தைப் பிடித்து நியூசிலாந்து அணிக்காக நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.
நாம் ஸ்கொட்லாந்து அணிக்கான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச முடிவெடுத்த போது, அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு அமைந்தமை பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் எளிதில் கணிக்க முடியாத இந்த ஆடுகளத்தில் ஸ்கொட்லாந்து வீரர்கள் இவ்வளவு ஓட்டங்களை பெற்றதையும் பாராட்டாமல் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment