நல்லாட்சி அரசுக்கு இராஜதந்திர வெற்றி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் ஷெய்க் ராத் அல் ஹ¥சைன், இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கியத்துவமிக்க தீர்மான மொன்றை நேற்று முன்தினம் அறிவித்தார்.

இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்துக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கப் பெற்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம்மிக்க வெற்றியாகும்.

அதுதான் இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்கவென ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவ நீதம்பிள்ளை மூவர் அடங்கிய சர்வதேச குழுவொன்றை கடந்த வருடம் நியமித்திருந்தார்.

ஜெனீவாவில் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 25/1 தீர்மானத்துக்கு அமையவே அவர் இக்குழுவை கடந்த வருடம் ஜூன் மாதம் நியமித்தார்.

பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டிசார், நியுசிலாந்து நாட்டின் முன்னாள் மேல்நீதிமன்ற நீதியரசரும் முன்னாள் ஆளுநர் நாயகமுமாக சில்வாயா கார்ட்ரிட், பாகிஸ்தான் நாட் டின் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும் அந்நாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருமான அஸ்மா ஜஹாங்கிர் ஆகிய மூவருமே இக்குழு வில் உள்ளடக்கப்பட்டனர்.

இக்குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவென இலங்கைக்கு வருகை தர அனுமதி கோரியபோதிலும் கடந்த ஆட்சியாளர் கள் அதற்கு அனுமதியளிக்காததோடு பாராளுமன்றத்திலும் அவர்களது வருகையை தடுப்பதற்கான தீர்மானமொன்றையும் நிறைவேற்றினர். அப்படியிருந்தும் கூட இவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையே எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழு வின் 29ஆவது அமர்வில் வெளியிடப்பட ஏற்கனவே ஏற் பாடாகியிருந்தது. 

இருப்பினும் இவ்வாறான சூழ்நிலையில் இந் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இம்மாற்றத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்நாட்டின் ஜனாதிபதியா னார். அத்துடன் புதிய அரசாங்கமும் ஆட்சி பீடம் ஏறியது.

இந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆவார். இவர் முன்னனுபவமிக்கவராவார். அதனால் செயல் திறனுடனும் தூர நோக்குடனும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வருகின்றார். அவரது பணிகள் பாராட்டத்தக்கவை.

அந்த வகையில், அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அண்மையில் எழுதினார். இவ் ஆணைக்குழு இலங்கை தொடர்பாக வெளியிட இருக் கும் அறிக்கையை வெளியிடுவதை காலதாமதப்படுத்துவதற்கான நியாயங்களை முன்வைத்து கால அவகாசம் வழங்குமாறு அக்கடிதத்தில் கோரி இருந்தார்.

அக் கடிதத்தில், “எமது அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாத காலம்தான் நிறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் ஊடக சுதந்திரம், மனித உரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன் னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யுத்த குற்றச்சாட்டு தொடர்பான விவகாரங்களை உரிய முறையில் கையாளல் குறித்தும் எமது அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, யுத்தக் குற்றச்சாட்டுகளை உரிய முறையில் கையாளும் உரிய நீதிப் பொறிமுறையை உருவாக்கவென கால அவகாசம் வழங்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தில் கவனம் செலுத்திய உயர் ஸ்தானிகர் ராத் அல் ஹுஸைன், இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதோடு எமக்கு தெளிவான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுகிறது. அந்நாட்டில் ஏறபட்டுள்ள ஆட்சிமாற்றம் மற்றும் உருவாகியுள்ள சூழல் என் பவற்றை கருத்திற் கொண்டு இந்த அறிக்கையை வெளியிடும் காலத்தை ஆறு மாதங்களுக்கு அதாவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தாமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை இலங்கை மாத்திரமல்லாமல் அமெரிக்காவும் பெரிதும் வரவேற்றுள்ளது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப் படும் இவ்யோசனை அமெரிக்காவின் பின்புலத்தோடு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கொண்டுவரப்பட்டது தெரிந்ததே.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்த பிழையான அணுகுமுறைகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயல் திறன் மிக்க தூரநோக்குடன் கூடிய வேலைத்திட்டங்களின் பய னாகவே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இவ்வாறான ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்திருக்கிறது. இது பெரிதும் வரவேற் கத்தக்க ஒரு விடயமாகும். அதேநேரம் புதிய அரசாங்கத்தின் செயல்திறனுக்கும் தூரநோக்குக்கும் கிடைக்கப்பெற்ற பாரிய வெற்றியே இது.

இந்த நிலைமை உலக நாடுகளை மீண்டும் இலங்கையோடு நெருக் கமடையச் செய்வதற்கான முன் சமிக்ஞையாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment