'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பரிசாக வென்ற ஒரு கிலோ தங்கத்தை தானம் செய்த இலங்கைத் தமிழ் மாணவி ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அந்த மேடையிலேயே தமிழகம் மற்றும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகள் நலனுக்காக வழங்குவதாக ஜெசிக்கா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யாவிடம் இருந்து நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து நடிகர் சூர்யாவை சந்திக்க சென்ற ஜெசிக்காவைஇ போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா கொடுத்தனுப்பிய சிறப்பு பரிசையும் ஜெசிக்காவுக்கு இந்த சந்திப்பின்போது சூர்யா வழங்கி பாராட்டியுள்ளார்.
நடிகர் சூர்யாவை சந்தித்தது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்று ஜெசிக்கா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவும் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment