பிரித்­தா­னிய பொதுத் தேர்தல் இன்று ஆரம்பம்


பிரித்­தா­னி­யாவின் 56 ஆவது பாரா­ளு­மன்­றத்தைத் தெரிவுசெய்­வ­தற்­கான முக்­கி­யத்­து­வ­மிக்க பொதுத் தேர்தல் இன்று ஆரம்­ப­மா­கி­றது.

தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான இரு கட்­சி­க­ளாக அந்­நாட்டுப் பிர­தமர் டேவிட் கமெ­ரோ­னின் பழை­மை­வாதக் கட்­சியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரான எட் மிலிபான்­டி­ன் தொழில் கட்­சியும் விளங்­கு­கின்­றன.
இந்த இரு கட்­சி­களும் 1922 ஆம் ஆண்டு முதல் பிரித்­தா­னி­யாவின் மிகப் பெரிய கட்­சி­க­ளாக விளங்கி அந்­நாட்­டுக் கான பிர­த­மர்­களை வழங்கி வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் அந்தக் கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வரே அடுத்த பிர­த­ம­ராக வரு­வ­தற்கு வாய்ப்­புள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. மேற்­படி தேர்­த­லை­யொட்டி பிரித்­தா­னிய அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் தீவிர பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
எனினும் இந்த தேர்­தலில் எந்­த­வொரு கட்­சியும் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெறும் சாத்­தி­ய­மில்லை என கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் தெரி­விக்­கின்­றன.
பிரித்­தா­னியா ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்­ததை விடவும் பல­ம­டைந்­துள்­ள­தா­கவும் ஆயினும் மேலும் செய­லாற்ற வேண்­டி­யுள்­ள­தா­கவும் பிர­தமர் டேவிட் கமெரோன் தெரி­வித்­துள்ளார். பழை­மை­வாத கட்­சிக்கு இந்த தேர்­தலில் வெற்றி பெற முடியும் என அவர் கூறினார்.

அதே­ச­மயம் எட் மிலிபான்ட், எமது நாட்­டுக்கு கடின உழைப்பின் வெகு­ம­தியை மீளப் பெற்றுத் தரு­வ­தற்கு மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
பிர­தமர் டேவிட் கமெ­ரோனின் பழை­மை­வாத கட்சி 2010 ஆம் ஆண்டுத் தேர்­தலில் 307 பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை வென்­றெ­டத்­துள்ளார்.

“2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து நாம் பல­வற்றை அடைந்­துள்ளோம். எனினும் கல்வி உள்­ள­டங்­க­லான விட­யங்­களில் தற்­போது அடையப் பெற்­ற­வைகள் திருப்­ப­தி­க­ர­மா­ன­வை­யாக இல்லை" என தெரிவித்துள்ள டேவிட் கமெரோன்இ நலன்புரி மற்றும் பாடசாலை சீர்திருத்த விவகாரங்கள் தொடர்பில் மேலும் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment