கல்முனை ஸாஹிரா கிறிக்கட் அணி நாளை பண்டாரவளையில் புனித தோமஸ் கல்லூரியுடன் பலப்பரீட்சை

இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அநுசரணையில் ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி நாளை (27) பண்டாரவளையில் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.

தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் நடத்தாப்படும் மேற்படி சுற்றுப் போட்டியில் கடந்த வருடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன் மூலம் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அகில இலங்கை சிங்கர் ஸ்ரீ லங்கா பாடசாலைகள் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வருடத்திற்கான போட்டி நாளை  (27)  பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கும் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கையிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட 33 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரே பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி அக்குரண அல் அஸ்ஹர் கல்லூரி, ,பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி, புனித அலோசியஸ் கல்லூரி, பலாங்கொட ஆனந்த மைத்திரிய மகா வித்தியாலயம், கல்கிசை புனித தோமஸ் கல்லூரி, பாதுக்க ஸ்ரீ பியரெட்ன மகா வித்தியாலயம், கொட்டாவ ஆனந்த மகா வித்தியாலயம் , கொழும்பு நாலந்த கல்லூரி, கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி, கொழும்பு வெலுவான கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி, றாகம் பஸீலிகா கல்லூரி, மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு தேஸ்டன் கல்லூரி, ஹுங்கம விஜயபா கல்லூரி, மத்துகம் சீ. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா வித்தியாலயம், வாதுவ மத்திய கல்லூரி, ஹொரண தக்ஸிலா கல்லூரி, கரண்தெனிய மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் யாழ்ப்பாணக்கல்லூரி, கோட்டே புனித தோமஸ் கல்லூரி, தெஹிவல எஸ்.ரீ.எஸ்.கல்லூரி, மொரட்டுவ புனித செபஸ்தியன், ஹேனாகம வித்தியாலயம், கட்டுனேரிய புனித செபஸ்தியான், குருநாகலை மலியதேவ கல்லூரி, நீர்கொழும்பு ஹரிஸ்சந்திரா கல்லூரி, வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல கல்லூரி, ஆகிய இலங்கையின் முன்னணி பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளன.

கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அணி வீரர்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் அலியார் ஏ பைஸருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், விளையாட்டு அபிவிருத்திக்குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன நடைபெறவிருக்கும் போட்டியில் கடந்த வருடம் போல் வெற்றி பெற்று அகில இலங்கை சம்பியன்களாக வெற்றிபெற்று எமது மண்ணிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையைத் தேடித்தர வேண்டும் என வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment