நவுசர் பௌசீ கைது

மேல் மாகாணசபை உறுப்பினர் நவுசர் பௌசீ கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் நவுசர் பௌசீயை கைது செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பௌசீ வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு குறித்த வர்த்தகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அவரை கைது செய்யுமாறு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவுசர் பௌசீ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment