சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதாவை விடுதலை செய்து, கடந்த, 11ம் தேதி, கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடனடியாக ஜெயலலிதா முதல்வராவார் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், 12ம் தேதி நடைபெற உள்ளது. ஜெயலலிதா, 17ம் தேதி பதவிஏற்பார் என, தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
ஆனாலும் விடுதலையான பிறகு அ.தி.மு.க., தரப்பில், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.
இதனால், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பாரா? இல்லை? பன்னீர்செல்வமே தொடர்வாரா? என்ற விவாதமே வெளி வந்து கொண்டிருந்தன.
குமாரசுவாமி ஜெயலலிதாவை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி, இரண்டு நாட்களாகியும், ஜெயலலிதாவை சந்திக்க முடியாததால், அமைச்சர்களும் கலக்கம் அடைந்தனர்.
எனினும், எப்போது வேண்டு மானாலும், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலின்படி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சென்னையில் முகாமிட்டனர்.
எம்.எல்.ஏ., விடுதியில், பெரும்பாலானோர் தங்கியிருந்தனர். நேற்று காலை, தலைமைச் செயலர், ஜெயலலிதா வீடான போயஸ் கார்டன் சென்று வந்தார்.
அதன் பின், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 19 அமைச்சர்களை, போயஸ் கார்டன் வரும்படி, உத்தரவிடப்பட்டது. அதன்படி, மாலை, 3:00 மணிக்கு, அனைவரும் போயஸ் கார்டன் சென்றனர்.
மாலை, 4:30 மணிக்கு, ஒவ்வொரு வராக வெளியே வந்தனர். முதல் அரை மணி நேரம், ஜெயலலிதா அனைத்து அமைச்சர்களையும் சந்தித்துள்ளார். அவர்கள் ஜெ.,வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு நடந்த கூட்டத்தின் போது தற்பொழுது முதல் அமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்ச்செல்வம் பதவி விலக, ஜெயலலிதா பதவி ஏற்பார் என்று பேசப்பட்டதாக அதிமுக வினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி அடுத்தவாரம் அளவில் பதவியேற்பு நிகழ்வு நடக்கலாம் என அறியமுடிகின்றது.
0 comments:
Post a Comment