கிறிஸ் கெயில் விஸ்வரூபம்; பெங்களூருக்கு அபார வெற்றி


கிறிஸ் கெயில் அதி­ர­டி­யாகப் பெற்ற சதத்தின் உத­வி­யுடன் பெங்­களூர் ரோயல் செலஞ்சர்ஸ் 138ஓட்­டங்­களால் அபார வெற்றி பெற்­றுள்­ளது. ஐ.பி.எல் தொடரின் 40ஆவது போட்டி பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்­சாப்­புக்­கு­மி­டையில் நேற்­றைய தினம் பெங்களூரில் நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் களத்­த­டுப்பை தெரிவு செய்­தது. அதன் பிர­காரம் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பெங்­களூர் 20 ஓவர்­கள் நிறைவில் 3 விக்­கெட்­டுக்­களை மட்டும் இழந்து 226ஓட்­டங்­களைப் பெற்­றது.
பெங்­களூர் சார்­பாக ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர் கிறிஸ் கெயில் 57பந்­து­களில் 12 ஆறு ஓட்­டங்கள், 7 நான்கு ஓட்­டங்கள் உள்­ள­டங்­க­லாக 117ஓட்­டங்­களை அதி­ர­டி­யாகப் பெற்றுக்கொடுத்தார். விராட் கோஹ்லி 32ஓட்­டங்­க­ளையும் ஏ.பி.டிவில்­லியர்ஸ் ஆட்­ட­மி­ழக்­காது 47ஓட்­டங்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்தார்.
இமா­லய இலக்கை நோக்கி பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பஞ்சாப் 13.4ஓவர்­களில் வெறு­மனே 88ஓட்­டங்­களை பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து படு­தோல்வி அடைந்­தது. அவ்­வணி சார்­பாக அக்ஷர் பட்டேல் ஆட்­ட­மி­ழக்­காது 40ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாக பெற்றார். சாஹா 13ஓட்­டங்­களைப் பெற்­ற­தோடு ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் அரங்கு திரும்­பினர். பந்து வீச்சில் ஸ்டாக், அரவிந் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment