கழுத்துப் பிடிப்பு, தோள்­பட்டை வலிகள் ஆபத்­தா­ன­வை­யா?

“பஸ்­சாலை இறங்கி நேரை உங்­க­ளிட்­டைத்தான் வாறன்” என்று ஒரு கையை மடக்கிக் கழுத்தைத் தட­வி­ய­படி சொன்னார்.
மழை நீரால் நிறைந்து கிடக்கும் வயல்­க­ளையும், போரினால் சிதைந்து இன்­னமும் திருத்­தப்­ப­டாது கிடக்கும் கட்டடங்­க­ளையும் பார்த்துக் கொண்டே பகல் முழுவதும் பயணம் பண்­ணி­யி­ருக்­கிறார். ஒரே பக்­க­மாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்­த­படி வந்­ததில் பிடித்­து­விட்­டது.
படுக்­கையில் இசகு பிச­காகப் படுப்­பது, படுத்­தி­ருந்­த­படி புத்­தகம் படிப்­பது, கணினி மற்றும் ரீவி திரையை நேரே இருந்து பார்க்­காது கழுத்தை ஒரு பக்­க­மாகத் திருப்பி நீண்ட நேரம் பார்ப்­பது, நீண்ட நேரம் ஒரு நிலையில் இருந்து வாகனம் செலுத்­து­வது, தலை­ய­ணை­களை உயர்த்தி வைத்துப் படுப்­பது போன்ற கழுத்துத் தசை­க­ளுக்கு அதிக வேலைப்­பளு கொடுக்கும் செயற்­பா­டு­களால் அத்­த­கைய வலிகள் ஏற்­ப­டு­கின்­றன.
இவ்­வாறு திடீ­ரெனக் கழுத்தில் வலி எழு­வதும், அதை ஆட்டி அசைக்க முடி­யாது துன்­பப்­ப­டு­வதும் மருத்­து­வர்கள் அடிக்­கடி காணும் ஒரு பிரச்­ச­ினைதான். நம்மில் ஒவ்­வொரு மூன்­று­பேரில் இரு­வ­ருக்கு தமது வாழ்­நாளில் ஒரு தட­வை­யா­வது கழுத்து வலிப் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்கும் எனத் தர­வுகள் சொல்­கின்­றன.
இவ்­வா­றான வலிகள் பொது­வாக ஆபத்­தான நோய்கள் அல்ல. ஏன் வரு­கி­றது என்­ப­தற்கு அச்­சொட்­டான கார­ணத்தைக் கண்­டு­பி­டிக்க முடி­யாது. கழுத்தைத் தவ­றான நிலையில் வைத்­தி­ருந்­ததால் அல்­லது திருப்­பி­யதால் ஏற்­பட்ட பிடிப்பாகவே இருக்கும். கழுத்தை ஆட்­டாமல் அசை­யாமல் ஒரே நிலையில் வைத்­தி­ருப்­பதைத் தவிர்த்து வழ­மை­போல இயங்­கு­வ­துடன் கடு­மை­யான வேலை­களைக் கொடுக்­காமல் வைத்­தி­ருக்க தானா­கவே குண­மா­கி­விடும். அல்­லது வலி நிவா­ரணி மருந்­து­களை சில நாட்­க­ளுக்கு உட்­கொள்ளத் தணிந்­து­விடும்.
இருந்த போதும் வலி தொடர்ந்து இருந்தால் அல்­லது வலி­யுடன் மேற்கை முன்­னங்கை, கைவி­ரல்கள் போன்ற இடங்­களில் மரப்­பது போன்ற உணர்வு ஏற்­பட்டால் அது சற்று தீவி­ர­மான நோயாக இருக்கக் கூடும். அதேபோல் தோள் மூட்டில் கடு­மை­யான வலி­யாக இருந்­தாலும் மருத்­து­வரைக் காண வேண்டும்.
கார­ணங்கள்
தசைப் பிடிப்­புகள் - நீண்ட நேரத்­திற்கு தொடர்ச்­சி­யாக கழுத்தின் தசை­க­ளுக்கு வேலை கொடுப்­பதால் அவ்­வாறு நேரலாம். கட்­டு­ரையின் ஆரம்­பத்தில் சொன்ன உதா­ர­ணங்கள் இதற்குப் பொருந்தும்.
கழுத்து எலும்­பு­களின் தேய்வு – வயது மூப்­ப­டையும் போது முழங்கால் மற்றும் இடுப்பு எலும்­புகள் படிப்­ப­டி­யாகச் சேதம் அடை­வது போலவே கழுத்தில் உள்ள முண்ணான் எலும்­பு­களும் சேதம் அடை­வதால் கழுத்தில் வலி ஏற்­ப­டலாம்.
நரம்­புகள் அழுத்­துப்­ப­டுதல்
முண்ணான் எலும்­புகள் ஊடாக நரம்­புகள் வெளி­வந்து உடல் உறுப்­புகள் அனைத்­திற்கும் செல்­கின்­றன. கழுத்து முண்ணான் எலும்­புகள் சேத­ம­டையும் போது அதி­லி­ருந்து எலும்புத் துருத்­தல்கள் வளர்­வ­துண்டு. அல்­லது முண்ணான் எலும்­புகள் சேத­ம­டை­வதால் அவற்­றிக்கு இடை­யே­யான இடைத்­தட்டம் சற்று வில­கலாம். அவ்­வாறு வில­கு­வதை cervical spondylosis என்­பார்கள். 50 வய­திற்கு மேற்­பட்ட பல­ரிலும் இது நிக­ழலாம் என்­ற­போதும் அவர்கள் எல்­லோ­ருக்கும் வலி ஏற்­ப­டு­வ­தில்லை.
ஆனால், இவற்றின் கார­ண­மாக முண்ணானில் இருந்து வெளியே வரும் நரம்­புகள் அழுத்­தப்­படும் போது வலி ஏற்­படும். இதன் கார­ண­மாக நோயா­னது கழுத்தில் மட்டும் இருந்­தாலும் வலி­யா­னது அங்­கி­ருந்து வரும் நரம்­புகள் செல்லும் பகு­தி­க­ளான மேற்கை, முன்­னங்கை, கைவி­ரல்கள் போன்­ற­வற்றில் உண­ரப்­படும்.
விபத்­துகள்: - வேக­மாகப் பின்­னி­ருந்து வரும் வாகனம் முன்னால் செல்­வதை இடிக்கும் விபத்­து­களின் போது தலை­யா­னது சடு­தி­யாக முற்­புறம் தள்­ளுப்­பட்டு அதன் பின்னர் பின்­புறம் தள்­ளுப்­படும். இதன்­போது கழுத்துத் தசை­நார்கள் சேதம் அடை­வ­தாலும் பல­ருக்கு வலி ஏற்­ப­டு­கி­றது.
வேறு நோய்கள்: - ரூமட்­ரொயிட் வாதம் புற்­றுநோய் போன்­றவை கழுத்து எலும்­பு­களை தாக்­கு­வ­தாலும் வலி ஏற்­ப­டலாம்.
சாதா­ர­ணமா? தீவி­ரமா?
கழுத்துப் பிடிப்­புகள் பெரும்­பாலும் ஆபத்­தான நோய்கள் கார­ண­மாக வரு­வது அல்ல என ஆரம்­பத்தில் சொன்னோம்.
இது ஆபத்­தா­னதா பிரச்­சினை அற்­றதா என்­பதை நீங்­களே இனங்காண்­பது எப்­படி?
ரூமட்­ரொயிட் மூட்டு வாதம், ஒஸ்­டி­யோ­பொ­ரசிஸ் போன்ற மூட்டு நோய்கள் அல்­லது எயிட்ஸ், புற்­றுநோய் போன்ற வேறு தீவிர நோய்கள் உங்­க­ளுக்கு ஏற்­க­னவே இருக்­கும்­போது கழுத்து மற்றும் தோள்­பட்டை வலி ஆரம்­பித்தால் அது அசட்டை பண்ணக் கூடி­யது அல்ல.
வலி­யா­னது வரு­வதும் தானே குண­மா­வதும் மீண்டும் வரு­வ­து­மாக இருந்தால் பெரும்­பாலும் தீவிர நோயாக இருக்­காது. மாறாக வலி­யா­னது படிப்­ப­டி­யாக மோச­ம­டைந்து செல்­கி­றதெனில் அது கவ­னத்தில் எடுக்­கப்­பட வேண்­டி­யதாகும்.
நோயின் தாக்கம் வேறு இடங்­க­ளுக்குப் பர­வு­வதாக இருந்தால் அக்­கறை எடுக்க வேண்டும். ஒரு கை அல்­லது இரு கைகளும் பல­வீ­ன­மாக இருப்­ப­தாக உணர்ந்தால், அல்­லது அதில் விறைப்பு, மரப்­பது, எரி­வது போன்ற அறி­கு­றிகள் இருந்தால், விரல்­களால் நுணுக்­க­மான வேலை­களைச் செய்­வது படிப்­ப­டி­யாக இய­லாது போனால் அது நரம்­புகள் அழுத்­தப்­ப­டு­வ­தா­லா­கவே பெரும்­பாலும் இருக்­கலாம். எனவே மருத்­து­வரைக் காண­வேண்­டி­யது அவ­சியம்.
நடை தடு­மாற்றம், கால்கள் பாதங்­களில் விறைப்பு, சிறுநீர் கழிப்­பதில் பிரச்­சினைகள் போன்ற அறி­கு­றிகள் தோன்­றினால், அதுவும் முண்ணான் அழுத்­தப்­ப­டு­வ­தாக இருக்­கலாம். எனவே உட­னடி அக்­கறை தேவைப்­படும்.
கழுத்து வலி­யுடன் காய்ச்சல், உடல் மெலிதல் போன்ற அறி­கு­றிகள் இருந்­தாலும் உட­னடிக் கவனம் வேண்டும்.
பரி­சோ­த­னைகள்
சாதா­ரண வலி­க­ளுக்கு எந்­த­வித பரி­சோ­த­னை­களும் தேவைப்­ப­டாது. தானா­கவே குண­ம­டைந்­து­விடும். அல்­லது மருத்­துவர் உங்கள் அறி­கு­றி­களைப் பற்றி தெளி­வாகக் கேட்டு அறி­வ­துடன் உடலைப் பரி­சோ­தித்துப் பார்ப்­ப­துடன் பிரச்­ச­ினையை இனங்­கண்டு சிகிச்சை செய்வார்.
ஆயினும், இது சற்று தீவி­ர­மான நோயின் அறி­குறி என அவர் எண்­ணினால் குருதிப் பரி­சோ­த­னை­க­ளுடன், எக்ஸ்ரே, சி.ரி. ஸ்கேன், நரம்புப் பரி­சோ­த­னை­க­ளையும் மேற்­கொள்ளக் கூடும்.
சிகிச்சை
சாதா­ரண கழுத்து வலி­க­ளுக்கு தீவிர சிகிச்­சைகள் தேவைப்­ப­டாது. கழுத்துத் தசை­க­ளுக்கு ஊறு கொடுக்கும் செயற்­பா­டு­களைத் தவிர்க்கும் அதே நேரம் கழுத்தை வழ­மை­போல பயன்­ப­டுத்த வேண்டும்.
அதா­வது வலிக்­கி­றது என்று சொல்லி கழுத்தை ஆட்டி அசைக்­காது ஒரே நிலையில் வைத்­தி­ருப்­பது வலியை மோச­மாக்கும். டைகு­ளோ­பனிக் ஜெல் போன்ற வலியைத் தணிக்கும் மருந்­து­களை நோயுள்ள இடங்­களில் பூசு­வது உதவும்.
மருந்­து­களைப் பொறுத்த வரையில் பர­சிட்­டமோல் மாத்­தி­ரைகள் அல்­லது வேறு வலி­நி­வா­ரணி மாத்­தி­ரை­களை உட்­கொள்­வது வலியைத் தணிக்கும்.
மென்­மை­யான தலை­ய­ணையை உப­யோ­கி­யுங்கள். மிகத் தடிப்­பான தலை­ய­ணைகள் கழுத்தை முற்­பு­ற­மாக வளைய வைப்­பதால் வலியை மோச­மாக்­கலாம். இதைத் தடுக்க தலை­ய­ணையை கழுத்­தி­லி­ருந்து பிடரி வரை படரும் வரை வைப்­பது நல்­லது.
கணினி, தொலைக்­காட்சி, ஐபோன் போன்­ற­வற்றை உப­யோ­கிக்­கும்­போது கழுத்­தா­னது ஒரே நிலையில் இருப்­பதைத் தவி­ருங்கள். இடை­யி­டையே கழுத்தைத் திருப்பி வேறு­பக்­க­மாகப் பார்­வையைச் செலுத்­து­வது உதவும்.
கழுத்துத் தசை­க­ளுக்­கான பயிற்சி
வீட்டில் நீங்­க­ளா­கவே செய்யக் கூடிய சில எளி­மை­யான பயிற்­சிகள் சாதா­ரண கழுத்து வலி­களைத் தணிக்க உதவும்.
தலையை நேராக வைத்­தி­ருக்க வேண் டும். முதலில் வலது பக்­கத்தில் உங்கள் உள்­ளங்­கையை வைத்து தலையை எதிர்ப்­பு­ற­மாகத் தள்­ளு­வது போல செய்யுங்கள். இதன்போது தலையைத் தள்ளுப்படவிடாது தடுங்கள்.
இந்தப் பயிற்சியின் போது தலையையோ கழுத்தையோ அசைக்க வேண்டியதில்லை. ஒன்றுக்கு ஒன்று எதிராக தள்ளும்போது தலையை அசைக்காமல் இருக்க வேண் டும். இதன்போது கழுத்து தசைகள் இறுகுவதை உணர்வீர்கள்.
இதேபோல இடப்புறம், முன்புறம் பின்புறம், நாடி ஆகியவற்றிலும் கையை வைத்து பயிற்சி செய்யுங்கள். கையைத் தலையில் வைக்காது செய்வதும் கழுத்துத் தசைகள் உறுதிபட உதவும்.
ஆயினும் இவை யாவும் சாதாரண வலிகளுக்கு உதவும். கடுமையான வலி மற்றும் வேறு நோய்களின் காரணமாக ஏற்பட்ட வலி எனில், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவருடன் கலந்து ஆலோசியுங்கள்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment