எகிப்து வான் தாக்குதல்களில் லிபியாவில் பொதுமக்கள் பலி

வடக்கு லிபியா மீது எகிப்து நடத்திய வான் தாக்குதல்களில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் இணைந்த லிபிய போராளிகள் சிர்த் நகரில் 21 எகிப்து கொப்டிக் கிறிஸ்தவர்களை தலைதுண்டித்து படு கொலை செய்ததற்கு பதிலடியாகவே எகிப்து நேற்று முன்தினம் இந்த வான் தாக்குதல்களை நடத்தியது. லிபிய கடற்கரை நகரான டெர்னாவில் இந்த வான் தாக்குதல்களில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தலைதுண்டிப்பு வேலையில் ஈடுபட்டவர் கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எகிப்து ஜனா திபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி உறுதிபூண்டுள்ளார்.

லிபியாவில் ஐ.எஸ். பயிற்சி முகாம், ஆயுதக் கிடங்கு ஆகியவற்றை இலக்குவைத்தே திங்கள் அதிகாலை வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எகிப்து இராணுவம் குறிப்பிடுகிறது. அரச தொலைக் காட்சியில் வெளியான எகிப்து இராணுவத்தின் அறிவிப்பில், "வான் தாக்குதல் மூலம் (ஐ.எஸ்.) துல்லியமாக இலக்கு வைக்கப்பட்டது. 

எமது விமானப்படையினரும் பாதுகாப்பாக திரும்பினர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லிபியாவின் அதிகாரப் போட்டி



* திரிபோலி: பழைய பாராளுமன்றத்தை உள்ளடக்கி அரசு அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலை நிராகரித்து வருகிறது.

* தொப்ருக்: மேற்குலகத்தின் ஆதரவை பெற்ற அரசு இயங்கி வருகிறது. 2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தலைநகர் திரிபோலியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

* இந்த இரு போட்டி அரசுக்கு ஆதரவு கொண்ட வௌ;வேறு ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

* பெங்காஸி: இரண்டாவது தலைநகர் மற் றும் 2011 மக்கள் கிளர்ச்சி ஆரம்பமான பெங்காசி நகர் இஸ்லாமிய போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் அல் கொய் தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்க ளும் அடங்கும்

* மிஸ்ராட்டா: மூன்றாவது தலைநகர் மற் றும் பிரதான துறைமுகம் இருக்கும் மிஸ் ராட்டா நகர் திரிபோலி அரசுக்கு ஆதர வாக உள்ளது. திரிபோலி ஆதரவு படை யினரே இங்கு கட்டுப்பாட்டை வைத்துள்னர்.

*  டெர்னா: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு இயங்கி வருகிறது.
எனினும் சமூக தளத்தில் வெளியான புகைப் படங்களை ஆதாரமாகக் கொண்டு எகிப்து வான் தாக்குதல்களில் டெர்னா நகரில் இருக்கும் குடியிருப்பு பகுதி சேதத்திற்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.

தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு இயங்கு லிபிய அரசின் தலைவர் ஒமர் அல் ஹஸி, எகிப்தின் இந்த தாக்குதல்கள் 'தீவிரவா தம்' என்று கண்டித்துள்ளார். ஒரு "பாவப்பட்ட ஆக்கிரமிப்பு" என்றும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

"எகிப்து இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட கொடுமையான தாக்குதல், தீவிவாதத்தின் மூலம் லிபியாவின் இறைமை அப்பாட்டமாக மீறப்பட்டிருப் பதோடு சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சரத்தும் மீறப்பட்டிருக்கிறது" என்று அல் ஹஸி குறிப்பிட் டுள்ளார். லிபியா மீதான வான் தாக்குதலை அடுத்து சிசி அரசு நாட்டின் முக்கிய நிலைகள் மீது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இதனிடையே சர்வதேச படை ஒன்று லிபியா வில் தலையீடு செய்ய ஐ.நா. தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று சிசி அழைப்பு விடுத்துள் ளார். பிரான்ஸ் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த சிசி, "எமது குழந்தைகளின் தலையை துண்டிப்ப தற்கு எம்மால் அனுமதி அளிக்க முடியாது" என் றார். சர்வதேச தலையீட்டை விட வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்;டார்.

"கடும்போக்கு ஆயுதக் குழுக்களிடம் லிபிய மக்களை சிறைக் கைதிகளாக நாம் விட்டு விட்டி ருக்கிறோம்" என்று சிசி குற்றம்சாட்டினார். 2011 இல் லிபியாவின் முஅம்மர் கடாபி அரசை பதவி கவிழ்க்க சர்வதேச கூட்டணி ஒன்று இயங்கியது தொடர்பிலேயே அவர் அந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். இதன்மூலம் சர்வதேசம் லிபியாவில் பூர்த்தியில்லா யுத்த நடவடிக்கையை முன்னெடுத் ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி மக்கள் கிளர்ச்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. நாட்டின் கட்டுப் பாட்டை பெற பல்வேறு ஆயுதக் குழுக்களும் பரஸ்பரம் சண்டையிட்டு வருகின்றன. லிபியாவின் தலைநகர் திரிபோலி மற்றும் தொப்ருக் நகரை மையமாகக் கொண்டு இரு போட்டி அரசுகள் இயங்கி வருகின்றன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment