மூன்று தலைவர்களை இணைக்க வைப்பது வேடிக்கையானது- ரணில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைக்க வைக்கும் முயற்சி வேடிக்கையானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்த மூன்று தலைவர்களையும் இணைக்கும் வைக்கும் முயற்சிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நகைச்சுவையாக கூறினார்.
இதன்போது நாடாளுமன்றத்தில் சிரிப்பொலியை கேட்கமுடிந்தது. 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தற்போது மைத்திரிபால விளங்குகிறார். ஆலோசனையாளர்களாக சந்திரிகாவும் மஹிந்தவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment