நெஞ்செரிச்சலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

இப்போதெல்லாம் நெஞ்செரிச்சல் அநேகருக்கும் வந்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவு உணவுக் குழாயின் வழியாக இரைப்பைக்குள் சென்றடைகிறது. உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு இருக்கிறது. இந்த வால்வானது ஒருவழிப் பாதையாக இருக்கிறது. அதாவது உணவுக் குழாய் மூலமாக கீழே செல்லும் உணவு இரைப்பைக்குள் சென்றடையும். ஆனால் இரைப்பைக்குள் இருக்கும் உணவு மேலெழும்பி உணவுக்குழாய்க்குள் வரமுடியாதபடி இந்த வால்வு செயல்படுகிறது.

நமது இரைப்பைக்குள் உணவைச் செரிக்கச் செய்வதற்காக ஒரு அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவில் அமைந்திருக்கும் வால்வின் இறுக்கம் குறைந்துபோவதால் மேலெழும்பி தொண்டைக்குள் வரும். அதனால் உண்டாவதே நெஞ்செரிச்சல். இதை வெறும் நெஞ்செரிச்சல் என்று அலட்சியம் காட்டக்கூடாது. 
நெஞ்செரிச்சலுக்கு எண்டோஸ்கோபிக் சிமெண்ட் இன்ஜெக்ஷன்,ரேடியோ ஃப்ரீகுவன்சி எனர்ஜி என நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.  நெஞ்செரிச்சலை ஆரம்பத்திலேயே குணப் படுத்தாவிட்டால் அடினோ கார்ஸினோமோ என்கிற புற்றுநோயாக மாறும் ஆபத்து உண்டு.
டொக்டர் மாறன்.
பாரதிராஜா மருத்துவமனை, சென்னை. 
அலைபேசி :  0091 9840339833, 0091 9952002927
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment