குழந்தையை விற்க முயன்ற பாம்புப் பெண்ணுக்கு பிணை

தனது 10 மாதக் குழந்தையை, விற்பனை செய்ய முற்பட்ட பாம்புப் பெண் நிரோஷா விமலரத்ன (23 வயது) மற்றும் அவரது கணவர் லக்மால் அபேசிங்க (24 வயது) ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் செல்ல, கெக்கிராவ நீதவான் புத்தினி அபேசிங்க உத்தரவிட்டார். 

'பாம்புப் பெண்' என்றழைக்கப்படும் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியவரான நிரோஷா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி ஆண்குழந்தையொன்றை பெற்றெடுத்தார்.. 

இக்குழந்தையை அவரும் அவரது கணவரும் இணைந்து விற்க முற்பட்டார்கள் என்ற முறைப்பாட்டின் பிரகாரம், கெக்கிராவ பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன. 

இருப்பினும், தாங்கள் குழந்தையை விற்க முற்படவில்லை என்றும் குழந்தையை பார்த்துக்கொள்வதற்காகவே உறவுக்காரப் பெண்ணிடம் கையளித்திருந்ததாக அவ்விருவரும் பொலிஸாரிடமும் நீதிமன்றத்திடமும் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே, அவ்விருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment