சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை - ஜனாதிபதி

சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை - ஜனாதிபதிஇலங்கையின் விவசாய சமூகம் எதிர்நோக்குகின்ற துக்ககரமான சிறுநீரக நோய் பிரச்சினையிலிருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு ஆதரவான அனைத்து நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். வௌிநாட்டு தூதுவர்களுடன் நேற்றுகாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தற்பொழுது பல பிரதேசங்களிலும் சமார் 40,000 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த நோயின் காரணமாக ஆண்டொன்றிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் பயன்படுத்தக் கூடிய குடிநீர் தான் இந்த சிறுநீரக நோய்க்கு பிரதாண காரணம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

அத்துடன் இதற்காக இலங்கைக்கு தம்மாலான முழு உதவிகளையும் வழங்குவதற்கு இந்த சந்திப்பில் கலந்து கொண்ட வௌிநாட்டு தூதுவர்கள் சம்மதம் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment